மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்தியர் வேலுநாச்சியார் என அவரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
தன்னுடைய வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றி கொண்டு,தன்னுடைய தனி திறமையால் யாரும் அசைக்க முடியாத் ராணியாக வலம் வந்தவர் வேலு நாச்சியார். கல்வி விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு,ஈட்டி எறிதல் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய இவர்,66 வது வயதில் மறைந்தார்.இவருக்கு இவரது பெயரில் 2008 ம் ஆண்டு தபால் தலையும் வெளியிடப்பட்டது.
இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.