இந்தியா

மத்திய அமைச்சர்களை 8 குழுக்களாக பிரித்த பிரதமர் மோடி... 

மத்திய ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 77 மத்திய அமைச்சர்களை 8 குழுக்களாக பிரித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

ஆட்சி நிர்வாகத்தில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சியாகவும், தொழில்நுட்ப ரீதியில் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சியாகவும் 77 மத்திய அமைச்சர்கள், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும், திட்ட விவரங்களை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கண்காணிக்கவும், மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கவும், இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் புதிய தளம் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘சிந்தனை அமர்வு’ என்ற பெயரில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் அவ்வபோது கூட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.