இந்தியா

இத்தாலியில் போப் பிரான்சிசை சந்தித்து பேசிய பிரதமர் மோடி...

இத்தாலியில், கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

Malaimurasu Seithigal TV

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய 16-வது ஜி-20 அமைப்பின் உச்சிமாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று இம்மாநாட்டின் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று தனி விமானம் மூலம் இத்தாலி புறப்பட்டுச் சென்றார். இத்தாலி தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு  உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனாவுக்கு பிறகான வளர்ச்சி, சுற்றுச்சுழல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். 

முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் இத்தாலிய பிரதமர் ட்ராகி ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சுத்தமான எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துவது உள்ளிட்ட செயல்திட்டத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தீர்மானங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.  இதையடுத்து வாட்டிகன் நகருக்கு புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.