இந்தியா

‘சோழா டோரா’ உடையில் பிரதமர் மோடி...3,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்...!

Tamil Selvi Selvakumar

உத்தரகாண்ட் சென்றுள்ள பிரதமர் மோடி, கையினால் நெய்த ‘சோழா டோரா’ என்ற பிரத்யேக ஆடையுடன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி:

தீபாவளியை முன்னிட்டு இன்று உத்தரகாண்ட் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, டேராடூன் விமான நிலையத்தில் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உற்சாக வரவேற்பு அழைத்தார். 

‘சோழா டோரா’ உடையில் சுவாமி தரிசனம்:

அதைத்தொடர்ந்து முதலில்  கேதர்நாத் கோயிலுக்கு சென்ற அவர், இமாச்சல பிரதேச பெண் கையினால் தயாரித்து வழங்கிய ‘சோழா டோரா’ என்ற பிரத்யேக உடையுடன் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்:

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, 2 ரோப் கார் திட்டங்கள் உள்பட 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

பத்ரிநாத் சென்றடையும் மோடி:

இதன்பிறகு, பத்ரிநாத் சென்றடையும் பிரதமர், அங்கு ஸ்ரீ பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதன்பின் ஆற்றங்கரையின் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.