இந்தியா

சிறையில் அதிகாரிகளை கண்டித்து கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரிகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரிகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம்  நடத்தபட்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் தண்டனை கைதிகள் இருவர் உடல் நலக்குறைவு காரணமாக சிறையிலேயே உயிரிழந்துள்ள நிலையில், சிறை மருத்துவர் உமா தங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி கைதிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.