இந்தியா

தனியார் நிறுவன ஆட்டோக்களுக்கு மூன்று நாட்கள் தடை!

Malaimurasu Seithigal TV

கர்நாடகாவில் ஊபர், ஓலா, ராபிடோ ஆட்டோக்களுக்கு 3 நாட்கள் தடை விதித்து மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனங்களுக்கு  அனுப்பியுள்ள அறிக்கையில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பான அறிக்கையை ஊபர், ஓலா, ராபிடோ ஆகிய 3 நிறுவனங்கள் அறிக்கையை தாக்கல் செய்யவும் மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.