இந்தியா

தனியார் மருத்துவமனைகள் கோவின் தளத்தில் தடுப்பூசி ஆர்டர் செய்யலாம்..!!!

தனியார் மருத்துவமனைகள் நாளை முதல் கோவின் தளம் மூலம் மட்டுமே தடுப்பூசிகளை பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

தனியார் மருத்துவமனைகள் நாளை முதல் கோவின் தளம் மூலம் மட்டுமே தடுப்பூசிகளை பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ள அரசு, அதிகப்பட்ச தடுப்பூசி கொள்முதல் அளவையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த மாதம், தடுப்பூசி போடப்பட்ட குறிப்பிட்ட ஒரு வாரத்தை தேர்வு செய்து, அதில் சராசரியாக ஒருநாள் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை கணக்கிட அறிவுறுத்தியுள்ளது.

இந்த எண்ணிக்கையை 30 நாட்களுக்கு கணக்கிட்டு அதில், இரு மடங்கு தடுப்பூசியை கோவின் தளம் மூலம் மாதத்தில் 4 முறை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தரவுகளை கோவின் தளத்திலிருந்து பெறுவதோடு, முதல் 15 நாட்கள் தனியார் தடுப்பூசி மையங்கள் கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை பொறுத்து அடுத்த 15 நாட்களுக்கான அதிகபட்ச தடுப்பூசி வழங்குவது நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.