இந்தியா

”குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி” மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பிரியங்கா காந்தி ஆதரவு!

Tamil Selvi Selvakumar

டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பிரியங்கா காந்தி நேரில் ஆதரவு தெரிவித்தார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு  தெரிவித்து வரும் நிலையில், தற்போது  பிரியங்கா காந்தி மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பெருமைமிக்க விளையாட்டு வீரர்களை மத்திய அரசு தெருவில் கண்ணீருடன் அமர வைத்து அழகு பார்ப்பதாகவும்,  குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.