இந்தியா

எஃகு ஆலையை தனியார் மயமாக்க எதிர்ப்பு...ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்...குண்டுகட்டாக தூக்கிய போலீசார்!

Tamil Selvi Selvakumar

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். 

விஜயவாடாவில் செயல்பட்டு வரும் விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டுகட்டாக கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.