இந்தியா

புதுச்சேரியில் 55 கடன் செயலிகள் நீக்கம்...சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் குறைந்த வருமானம் உள்ளவர்களை குறிவைத்து 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கும் செயலிகள் அதிக அளவில் செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் கடன்பெறும் போது மிகவும் எளிமையான நடைமுறை என ஆசை வார்த்தை கூறி, பின் அதிக வட்டி, அபராதம் போன்றவைகளை விதித்து ஏமாற்றுவதாக அதிக அளவு புகார்கள் எழுந்தது.

இதையடுத்து புதுச்சேரி அரசு மேற்கொண்ட ஆய்வில், மத்திய அரசின் அனுமதி ஏதுமின்றி செயல்பட்டு வந்த 55 கடன் செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மோசடிகளில் ஈடுபடும் கடன் செயலிகள் குறித்து புகார் தெரிவிக்க, ஒன்று ஒன்பது மூன்று பூச்சியம் என்ற சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.