இந்தியா

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் தங்கத்தேர் வீதி உலா...!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலின் மரத்தாலான தங்கத்தேர் வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி நகரப்பகுதியான வெள்ளாழ வீதியில் அருள்மிகு நந்திகேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மேலும் இக்கோவிலில் ஸ்ரீ நாடு சண்முக வேலாயுத சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது. இந்நிலையில் ஸ்ரீ நாடு சண்முக வேலாயுத சுவாமிகளின் 114 வது குரு பூஜை நடைபெற்றது. குரு பூஜையை முன்னிட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில் மாலை மரத்தாலான தங்கத்தேர் வீதி உலா நடைபெற்றது. மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான மரத்தாலான தங்கத்தேர் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு அருள்மிகு நந்திகேஸ்வரர் திருக்கோவிலுக்கு வீதி உலாவாக வந்தது. பக்தர்களுக்கு காட்சி அளித்த பின்னர் மீண்டும் மரத்தாலான தங்கத்தேர் மணக்குள விநாயகர் கோவிலை சென்றடைந்தது. வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.