இந்தியா

அவதூறு வழக்கில் ராகுல் நாளை மேல் முறையீடு...

Malaimurasu Seithigal TV

அவதூறு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிராக நாளை ராகுல் காந்தி மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கர்நாடகாவில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியி்ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்காக நாளை அவர் சூரத் செல்ல இருக்கிறார்.