இந்தியா

'புதிய பாஸ்போர்ட் பெற்றார் ராகுல்காந்தி' இன்று அமெரிக்கா பயணம்!

Malaimurasu Seithigal TV

ராகுல்காந்தி தனது புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டதை அடுத்து அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மறுத்ததையொட்டி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மக்களவை செயலகம் நீக்கியது. இதனையொட்டி மக்களவை உறுப்பினர்கள் போன்ற முக்கிய நபர்கள் பயன்படுத்தும் சிறப்பு பாஸ்போர்ட்டை அரசிடம் ஒப்படைத்தார். 

மேலும், அமெரிக்கா செல்வதற்காக சாதாரண குடிமக்களுக்கு வழங்கும் புதிய பாஸ்போர்ட் கோரி உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதனால் ராகுல்காந்திக்கு 3 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட் அளிக்க தடையில்லா சான்று அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.