டாய்கேத்தான்-2021 என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடினார்.
அப்போது அவர், இந்தியாவின் திறன்கள், கலை, கலாசாரம், சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புகிறதாகவும், நாட்டின் திறன்கள், யோசனைகளின் உண்மையான பிம்பத்தை உலகுக்கு முன்வைக்கும் பொறுப்பை இளைய தலைமுறையினர், தொடக்க நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருவதாகவும், ஆனால் பிரதமர், இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தை திசை திருப்பி, எதிர்காலத்துடன் விளையாடுவதாகவும் விமசித்தார்.