இந்தியா

அரசியல் விமர்சனத்துக்கு மத்தியிலும்  நடைப்பயணத்தை தொடரும் ராகுல்...!!!

Tamil Selvi Selvakumar

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 34வது நாள் ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார். 

பாரத் ஜோடோ யாத்ராவில் ராகுல்:

கடும் அரசியல் விமர்சனத்துக்கு இடையே, காங்கிரஸ் உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி பாரதத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமை பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அந்தவகையில் கேரளா, கன்னியாகுமரியில் நடைப்பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் முகாமிட்டு மாவட்ட வாரியாக தொண்டர்களை ஒன்றிணைத்து வருகிறார். 

இந்தநிலையில் சித்ரதுர்கா மாவட்டத்தில் இரவு ஓய்வு எடுத்த ராகுல் காந்தி, ஹர்திகோட்டே கிராமத்திலிருந்து தனது 34வது நாள் பயணத்தை தொடங்கினார். அப்போது அவரது நடைப்பயணத்தில் இடையூறு செய்யம் விதமாக மழை பெய்தும் அதனை பொருட்படுத்தாத அவர், வழிநெடுகிலும் காங்கிரஸார் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். 

இந்த நடைபயணம் நண்பகல் 11 மணிக்கு ஓட்டல் சேத்தன் அருகே சனிகேரி பகுதியில் நிறைவு பெறவுள்ளது. பின்னர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து பாதயாத்திரையை மீண்டும் தொடங்கும் ராகுல் காந்தி, இரவு 7 மணிக்கு சித்ரதுர்கா அருகே இன்றைய பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.