இந்தியா

ராகுல் காந்தி நடைபயணம் இன்றுடன் பத்தாவது நாள்!

இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்தியல் ரீதியாக ஒன்றிணைத்து வருகிறார்.

Malaimurasu Seithigal TV

இந்திய  மக்களை கருத்தியல் ரீதியாக ஒன்றிணைத்திடும் வகையில் 10வது நாளாக பாதயாத்திரையை தொடங்கியுள்ள ராகுல் காந்தி, கொல்லம் புதியக்காவு பகுதியில் மக்களுடன் பேரணி நடத்தி வருகிறார்.

ஒற்றுமை பயணம்

இந்தியாவை ஒன்றிணைத்திடும் வகையில் ‘இந்திய ஒற்றுமை பயணம்என்ற 150 நாட்கள் நடைபயணத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி இந்த பயணத்தை தனது ஆதரவாளர்களுடன்  தொடங்கிய ராகுல் காந்தி, கன்னியாகுமரியை தொடர்ந்து  கேரளாவில் நடைபயணத்தை நடத்தி வருகிறார்.

 அந்த வகையில் இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்தியல் ரீதியாக ஒன்றிணைத்து வருகிறார். அதன்படி கடந்த வியாழக்கிழமை காலில் ஏற்பட்ட கொப்பளம் காரணமாக ஓய்வெடுத்து கொண்ட ராகுல் காந்தி, மீண்டும் யாத்திரையை தொடங்கியுள்ளார்.

இன்றுடன் பத்தாவது நாள்

இந்தநிலையில் 10 ஆவது நாளான இன்று, கொல்லத்தில் உள்ள புதியக்காவு பகுதியில் பேரணியை தொடங்கிய அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் திரண்டு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பயணமானது எர்ணாக்குளத்தில் இன்று நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரையின் போது 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது குறித்து எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது.