இந்தியா

பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் ராஜஸ்தான்....!!

Malaimurasu Seithigal TV

அரசு இவ்வளவு திட்டங்களை ஏன் செயல்படுத்துகின்றன என்று சிலர் விமர்சிப்பதாக 
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட்.  அப்போது பேசியி அவர், கல்வி, மருத்துவம், காப்பீடு, குடிநீர், மின்சாரம், ரேசன் உள்ளிட்ட பலவற்றில் இலவச சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.  

அரசு இவ்வளவு திட்டங்களை ஏன் செயல்படுத்துகின்றன என்று சிலர் விமர்சிப்பதாகவும் இவ்வளவு திட்டங்கள் இருந்தும் பொருளாதாரத்தில் ராஜஸ்தான் 2வது இடத்தில் இருப்பது எப்படி என்று மக்கள் ஆச்சரியப்படுவதாகவும் குறிப்பிட்டு பேசினார் முதலமைச்சர் அசோக் கெலாட்.