இந்தியா

ராஜஸ்தானில் குரங்கம்மை அறிகுறிகள் கொண்ட முதல் நபர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் வழக்கு பதிவாகியுள்ளது. நோயாளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Malaimurasu Seithigal TV

ராஜஸ்தானில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று அறிகுறிகள் உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது நபருக்கு அதீத காய்ச்சலுடன் உடலில் சொறி போன்ற அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் குரங்கம்மைக்கான பிரத்யேக வார்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். மேலும் அவரது மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவரது அறிகுறிகள் உண்மையாகின், இது இந்தியாவில் பதிவு செய்யப்படும் ஏழாவது குரங்கம்மை வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.