இந்தியா

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து!!! காரணம் என்ன?!!

Malaimurasu Seithigal TV

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளை மீறியதால் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு. 

ராஜீவ்காந்தி அறக்கட்டளை:

ராஜீவ் காந்தி அறக்கட்டளை 1991 இல் நிறுவப்பட்டது.  தகவல்களின் படி, ராஜீவ் காந்தி அறக்கட்டளையானது கல்வியைத் தவிர சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.  

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்,  மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோர் நலன்களிலும் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளது. 

விசாரணை குழு:

ஜூலை 2020ல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 
குழு ராஜீவ் காந்தி அறக்கட்டளை பல விதிமீறல்களை செய்துள்ளதாக பல ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.  

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் விசாரணைகளை ஒருங்கிணைக்கும் அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்துள்ளது.

ஜூலை 2020ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் விசாரணை அறிக்கை வெளி வந்ததை அடுத்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
உரிமம் ரத்து:

காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக கூறி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

அறக்கட்டளையின் தலைமை:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக இருக்கிறார்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் இதன் அறங்காவலர்களாக உள்ளனர்.

-நப்பசலையார்