தனுஷின் முதல் ஹிந்தி படமான ‘ராஞ்சனா’, தமிழில் கூட ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் தனுஷின் நண்பனின் தோழியாக நடித்த ஸ்வரா பாஸ்கரை நாம் மறந்திருக்க மாட்டோம்.
சிறந்த குணச்சித்திர நடிகையாக பல ஹிந்தி படங்களில் நடித்த ஸ்வரா பாஸ்கர், கடந்த 2023 -ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினரான ஃபகத் அஹமத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது, அந்த நேர்காணலில் அவர் பேசியதாவது, “அடிப்படையில் மனிதர்கள் அனைவருமே இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள்தான். மாற்று பாலின ஈர்ப்பு என்பது பல நூற்றாண்டுகளாக நமக்குள் புகுத்தப்பட்ட சித்தாந்தம். அது இயல்பானது இல்லை. மக்களை அவர்களின் போக்கிலே விட்டால்தான் உண்மை புரியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு சமாஜ்வாடி கட்சியின் எம்.பி -யான டிம்பிள் யாதவ் மீது கிரஷ் (ஈர்ப்பு) உண்டு. சமீபத்தில்தான் அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். மேலும் நான் எனது கணவரின் அரசியல் வாழ்க்கையை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளேன். அதற்கு காரணம் எனது தைரியமான பாலியல் சார்ந்த கருத்துக்கள்தான். தற்போது உத்தரப்பிரதேசத்திலும் அவருக்கு அரசியல் சூழல் சாதகமாக இல்லை” என கிண்டல் அடித்திருந்தார். இந்த கருத்துக்களை ஸ்வரா பேசும்போது அவரின் கணவரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.