-
இந்தியா

10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை - பிரதமர் பெருமிதம்

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Jeeva Bharathi

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக ரோஜ்கர் மேளா திட்டம் தொடங்கப்பட்டு, மத்திய அரசால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 71 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, பணி நியமன ஆணைகளை பெற்ற இளைஞர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். மேலும், கடந்த கால ஆட்சிகளை போல் இல்லாமல், இளைஞர்களுக்கான பணி நியமனங்கள் வெளிப்படையாக நடைபெறுவதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டு இருப்பதாகவும், பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட கொள்கைகள், இளைஞர்களால் வடிவமைக்கப்பட்டது என கூறிய அவர், ஸ்டார்ட் அப்-களுக்கான உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா இருப்பதாக கூறினார்.

குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உற்பத்தி, சுற்றுலா, விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சிறப்பான பங்களிப்பை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, அனைத்து துறைகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டுள்ளதாக தெரிவித்தார்.