இந்தியா

கனமழை- ரெட் அலர்ட் எச்சரிக்கையால் மக்கள் பீதி

உத்தரகாண்டில் தொடர்மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

உத்தரகாண்டில் தொடர்மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்ரிநாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை அருகே இடைவிடாது கொட்டிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்று மலை பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதையடுத்து  காருக்குள் சிக்கிக் கொண்டவர்கள் ஜெசிபி உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மோலி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நந்தகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் முடித்துக் கொண்டு திரும்பிய போது இடைவிடாத மழையால் பயணத்தை தொடர முடியாமல் ஜங்கிள் சட்டி என்னும் பகுதியில் சிக்கி தவித்த 22 பக்தர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்கள் கவுரி குண்ட் என்னும் பகுதியில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.