மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.
பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் 81 உறுப்பினர்களை உள்ளடக்கிய அவரது மத்திய அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. 53 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பு வகித்து வந்தனர். இதில் முக்கிய அமைச்சர்கள் சிலர், கூடுதலாக 4 துறைகளை கவனித்து வந்தனர். இதன் காரணமாக மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டார். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். இன்று மாலை 6 மணியளவில் குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.