இந்தியா

6.5% ஆக தொடரும் ரெப்போ வட்டி விகிதம்...!

Malaimurasu Seithigal TV

வங்கிகளின் குறுகிய கால வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.  

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதம், 6 புள்ளி 5 சதவீதமாக நீடித்துவருகிறது.

இந்த நிலையில், நாட்டின் நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.

அப்போது பேசிய அவர்:-  மேலும் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்த சக்தி காந்ததாஸ் ரெப்போ வட்டி விகிதத்தை முந்தைய அளவிலேயே தொடர முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

சர்வதேச நிதி வளர்ச்சியில் இந்தியா 15 சதவீத பங்களிப்பை வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.