உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கடந்த செவ்வாய்க்கிழமை மேக வெடிப்பால் பெருமழை கொட்டியது. இதனால் ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கடேராவின் நீர் மட்டம் திடீரென உயர்ந்து, அங்குள்ள தாராலி கிராமத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
இதில் 5 -கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் காணாமல் போயுள்ளனர்.
இத்தகைய பேரழிவை சந்தித்து இருக்கக்கூடிய உத்தரகாசியின் தராலி பகுதியில் மீட்பு பணிகளை கண்காணிக்க அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி முகாமிட்டுள்ளார். அப்போது அங்கு நடந்த மீட்பு பணியை தாமி பார்வையிட்டபோது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
“குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இஷான்பூர் பகுதியை சேர்ந்தவர் தன்காவ்ரி. இவர் தனது குடும்பத்தோடு உத்ரகாண்ட்டில் உள்ள புனித தலமான கங்கோத்ரிக்கு யாத்திரை சென்றுருக்கிறார், கடந்த 5 -ஆம் தேதி ஏற்பட்ட பேரிடரில் சாலைகள் அடைக்கப்பட்டதால் எங்கும் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதனால் அவரது உறவினர்கள் அச்சத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் உத்தரகண்ட் அரசு விரைவாக செயல்பட்டு மீட்பு பணிகளை முடிக்கிவிட்டு அவர்களை மீட்டது. முதல்வர் தாமியே நேரடியாக களத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேற்பார்வையிட வந்த முதல்வர் தாமிக்கு சகோதர பாசத்தை உணர்த்தும் விதமாக தன்காவ்ரி தனது புடவையின் ஓரத்தை கிழித்து ராக்கி கட்டி விட்டார் இந்த காட்சி அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.