இந்தியா

ரூ.100-க்கு ஆசைப்பட்டு ரூ.6000 போன கதை தெரியுமா?  

கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் அருகே உள்ள பல்கலைக்கழகத்திற்கு சவாரி சென்று  அங்கிருந்து வெளியே வர முடியாமல் இருந்த ஆட்டோவை,  தீயணைப்பு துறையினர் கிரேன் மூலம் மீட்டனர். 

Malaimurasu Seithigal TV

கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் அருகே உள்ள பல்கலைக்கழகத்திற்கு சவாரி சென்று  அங்கிருந்து வெளியே வர முடியாமல் இருந்த ஆட்டோவை,  தீயணைப்பு துறையினர் கிரேன் மூலம் மீட்டனர். 

சிக்மகளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று  மதுவன் லேஅவுட் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சவாரி ஏற்றிக்கொண்டு ஆட்டோ டிரைவர் வினோத்  அங்கு சென்றார். பயணியை விட்டு விட்டு அவர் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே வர முயன்றபோது, அவர் வந்த சாலையின் ஒரு பகுதி வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் வெளியே வர முடியாமல் திணறினார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், கிரோன் உதவியுடன் அதனை மீட்டு, சாலையின் மறுபுறம் நிறுத்தினர். நூறு ரூபாய் சவாரிக்கு ஆசைப்பட்டு கிரேன் உதவி பெற 6,000 ரூபாய் செலவழிக்க நேர்ந்ததாக ஆட்டோ ஓட்டுனர் குமுறியுள்ளார்.