இந்தியா

தலைவர் பதவிக்கு போட்டியிடும் அசோக் கெலாட்...ராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்?

Tamil Selvi Selvakumar

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் கெலாட் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள நிலையில் புதிய முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட உள்ளனர். 

ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே:

உதய்பூரில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் எடுத்த முடிவின்படி கட்சியில் ஒருவர், ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும் என்பதனால் தலைவர் பதவிக்கு களம் இறங்கிய அசோக் கெலாட், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய முதலமைச்சர் யார்: 

இந்த நிலையில்  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சச்சின் பைலட், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.