இந்தியா

ஏழை தாயின் மகன் 12 கோடி ரூபாய் காரில் பயணிக்கலாமா..? பிரதமர் மோடியை சாடிய சஞ்சய் ராவத் எம்.பி

Malaimurasu Seithigal TV

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்தி வரும் மோடி, 12 கோடி மதிப்பிலான வெளிநாட்டு தயாரிப்பு காரில் பயணிக்கலாமா என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய விலை உயர்ந்த ஜெர்மனி தயாரிப்பான மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 ரக கார் வாங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் விலை 12 கோடி என்றும் 2 கார்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பிரதமரை சாடியுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், தன்னை சாமானியன் என்றும் ஏழை தாயின் மகன் என்றும் கூறி விளம்பரம் தேடும் பிரதமர் மோடி இதுபோன்ற காரில் பயணிக்கலாமா என்றும் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரை மட்டுமே பயன்படுத்தியதாகவும், எப்பேற்ப்பட்ட அச்சுறுத்தலின் போதும் அவர் தனது காரை மாற்றவில்லை என்றும் ராவத் குறிப்பிட்டுள்ளார்.