இந்தியா

என்.ஐ.ஏக்கு ரகசிய வந்த கடிதம்.... நாடு முழுவதும் எச்சரிக்கை விடுத்த என்.ஐ.ஏ..... 

Malaimurasu Seithigal TV

மும்பை உள்ளிட்ட நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு என்.ஐ. ஏ பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மெயிலில் வந்த கடிதம்:

தமிழகத்தில் கோவை கார் குண்டு வெடிப்பு, கர்நாடக மாநிலத்தில் குக்கர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளை என்.ஐ.ஏ விசாரணை செய்து வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப் போவதாக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  

எச்சரிக்கை:

இந்த கடிதத்தை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்துமாறும், உளவுத்துறையினர் உஷாராக செயல்படுமாறும், தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலங்களாக இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் திட்டம் தீட்டி வரும் நிலையில் எதிர்பாராத குண்டுவெடிப்பு நிகழ்வுகளும் நடந்துள்ள சூழலில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை கடிதம் தேசிய புலனாய்வு அமைப்புக்கு தாலிபான் பெயரில் அனுப்பப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

-நப்பசலையார்