இந்தியா

13 கோடி ரூபாய் மதிப்புள்ள கொடிய பாம்பு விஷம் பறிமுதல்...

மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் 13 கோடி மதிப்புள்ள பாம்பு விஷத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தக்ஷின் தினாஜ்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கோருமாரா எனும் தேசிய பூங்காவில் வைத்து மூன்று ஜாடி பாம்பு விஷத்துடன் பிடிபட்டுள்ளார். இந்த பாம்பு விஷம் சுமார் 13 கோடி மதிப்புள்ளது என கூறப்படுகிறது.

இந்த பாம்பு விஷம் சீனாவுக்கு கடத்துவதாக அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வனத்துறை காவலர்கள் விசாரிப்பதற்காக ஆறு நாட்கள் அவர் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.