சகோதரனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கருவுற்ற சிறுமியின் 30 வார கருவைக் கலைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதிபதி வேதனை:
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு நீதிபதி வி.ஜி.அருண் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுவனான தனது சொந்த சகோதரனாலேயே, சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வு மிகவும் கவலையளிப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் தேவை:
மேலும், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், பள்ளிகளில் பாலியல் கல்விக்கு இனியாவது முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து சிறுமியின் 30 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.