இந்தியா

ராகுல்காந்தி அலுவலகம் மீது எஸ்எப்ஐ அமைப்பினர் தாக்குதல் - காங்கிரஸ் கண்டனம்

Suaif Arsath

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் எம்பி அலுவலகம் மீது எஸ்எப்ஐ அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்பி அலுவலகத்திற்கு கொடியுடன் நுழைந்த எஸ்எப்ஐ அமைப்பினர் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன் ராகுல்காந்தியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வெளியிட்ட நிலையில், அதனை விமர்சிக்காமல் அமைதியாக இருந்ததால் போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தூண்டுதல் பேரிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது.