இந்தியா

சித்து மன்னிப்பு கேட்கும் வரை சந்திக்க மாட்டேன்... அமரீந்தர் சிங் பிடிவாதம்...

நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கேட்கும் வரை அவரை சந்திக்க போவதில்லை என்ற நிலைப்பாட்டில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விடாப்பிடியாக இருக்கிறார்.

Malaimurasu Seithigal TV
பஞ்சாப்பில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங்கிற்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இருவரையும் சமாதானப்படுத்த பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவி சித்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு எதிராக அவதூறாக பேசியதற்காக நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதுவரை அவரை சந்திக்க போவதில்லை என முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார்.
இதனிடையே சித்து முதல்வர் அமரீந்தர் சிங்-கை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமரீந்தர் சிங், சித்து தன்னை சந்திக்க நேரல் கோரியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது எனவும் தனக்கு எதிரான தனி மனித தாக்குதல்களுக்கு சித்து மன்னிப்பு கேட்கும் வரை அவரை சந்திக்க போவதில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.