தொழிற் போட்டியின் காரணமாக பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா காரில் சென்றுக் கொண்டிருக்கையில் மர்ம நபர்களால் துப்பாக்கியா சுட்டு கொல்லப்பட்டார்.
சித்து கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் தான், மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தோஷ் ஜாதவ் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் சந்தேக நபரான ஜாதவின் உதவியாளரையும் புனே போலீசார் கைது செய்துள்ளனர்.