தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட தயாராக இருப்பதாக கா்நாடக துணை முதலமைச்சா் டி.கே.சிவக்குமார் தொிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் பெங்களூருவில் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், காவிரி நீர் பிரச்சினையில் 2 மாநில விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்றும், குடிநீருக்கு தேவையான நீரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட தயாராக உள்ளதாகவும் தொிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள மனு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அவா் கூறியுள்ளார்.