இந்தியா

சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்- ஸ்மிருதி இரானி, பிரியங்கா காந்தி கண்டனம்

உத்தரபிரதேசத்தில், சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பிரியங்கா காந்தி  ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

உத்தரபிரதேசத்தில், சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பிரியங்கா காந்தி  ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் செல்போன் திருடியதாக கூறி, சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். அமேதியில் பதிவு செய்யப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், பலரும்  தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் கண்டனம் பதிவு செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பியில் பெண்களுக்கு எதிராக  குற்றச்சம்பவங்கள் நடப்பதாகவும், ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல்  தூங்கிக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.