இந்தியா

இனி 9 நகரங்களிலும் கிடைக்கும் ஸ்புட்னிக் வி

ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் 9 நகரங்களில் சந்தைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் 9 நகரங்களில் சந்தைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கி தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரகால தேவைக்காக மத்திய அரசு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்ததால், கடந்த மே 14-ம் தேதி முதல் இந்த தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்தது. அதன்படி, ரஷ்யாவின் நேரடி நிதியத்துடன் இணைந்து டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஐதரபாத், விசாகப்பட்டினத்தில் செலுத்தப்பட்டு வரும் நிலையில்  தற்போது கூடுதலாக சென்னை, பெங்களூரு, மும்பை, கோல்ஹாபூர், மிரியலகுடா உள்ளிட்ட 9 நகரங்களில் விநியோகிக்க உள்ளதாக ஸ்புட்னிக் நிறுவனம்  தெரிவித்துள்ளது.