இந்தியா

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Suaif Arsath

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்து போனதால் இறக்குமதி பாதித்துள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்பய ராஜபக்சே அறிவித்தார்.