இந்தியா

மாநிலங்கள் 4.62 கோடி தடுப்பூசிகளை செலுத்தவில்லை-மத்திய அரசு  

மாநிலங்களுக்கு தற்போது வரை 74 கோடியே 25 லட்சத்து 94 ஆயிரத்து 875 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

மாநிலங்களுக்கு தற்போது வரை 74 கோடியே 25 லட்சத்து 94 ஆயிரத்து 875 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கும் தடுப்பூசி அளவு, கையிருப்பு உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி மாநிலங்களுக்கு 74 புள்ளி 25 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 4  கோடியே 62 லட்சத்து 75 ஆயிரத்து 955 தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் மாநிலங்கள் கைவசம் உள்ளதாகவும், கூடுதலாக  1 கோடியே 80 லட்சத்து 83 ஆயிரம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி தடுப்பூசி இலக்கு அதிகரித்து வருவதால், தடுப்பூசி மீதான தேவையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.