இந்தியா

கலவரக்காரர்களின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளால் பரபரப்பு - காவல்துறையிடம் விளக்கம் கேட்ட அரசு!

ஜார்கண்ட் மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறித்து காவல்துறையிடம் அம்மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது.

Tamil Selvi Selvakumar

முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கலவரமாக மாற போராட்டகாரர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தில் பெரும்புயலை கிளப்ப குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள் காவல்துறையால் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பின் சுவரொட்டியில் திருத்தம் உள்ளதாக கூறி காவல்துறையினர் அதனை நீக்கினர். இது குறித்து விளக்கமளிக்க காவல்துறைக்கு அம்மாநில  அரசு உத்தரவிட்டுள்ளது.