இந்தியா

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி-உதை.. வைரல் வீடியோ!

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 குண்டூர் அடுத்த ஒட்டிசெரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், பள்ளிக்கு சென்று ஆசிரியரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும், அவர்களை தடுக்க சென்ற சக ஆசிரியர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. சரியாக படிக்காததால் கண்டித்ததாகவும், அதை மாணவி தவறாக புரிந்து கொண்டதாகவும், ஆசிரியர் கூறியும், அதை மாணவியின் உறவினர்கள் ஏற்க மறுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் உறவினர்களையும், ஆசிரியரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.