இந்தியா

”நோ பேக் டே” புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!

Tamil Selvi Selvakumar

புதுச்சேரியில் நோ பேக் டே-யை  முன்னிட்டு இன்று மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, ஆண்டுக்கு பத்து நாட்கள் ‘NO BAG DAY’ கடைப்பிடிக்கவும், மாதந்தோறும் கடைசி வேலை நாளை பையில்லா தினமாகக் கடைப்பிடிக்கவும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்நிலையில் மாதத்தின் கடைசி வேலை நாளை நோ பேக் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் நோ பேக் டே-யை முன்னிட்டு இன்று மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்தனர்.

மேலும் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்துள்ள மாணவர்களுக்கு, அவர்களது திறமையை வளர்க்கும் வண்ணம், கைவினைப் பொருட்கள் செய்தல், வினாடி-வினா போட்டி, கதை சொல்லுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.