இந்தியா

இவங்களோட சமையலை நாங்கள் சாப்பிட மாட்டோம்; உணவை சாப்பிட மறுத்து மாணவர்கள் போராட்டம்!

Tamil Selvi Selvakumar

உத்தரகாண்ட் மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சமையல்காரர் சமைத்த உணவை உண்ண மறுத்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜிஐசி என்ற அரசு இடைநிலைக் கல்லூரியில் முன்னதாக இதேபோல் ஒரு பெண் சமையலர் பாதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் இதே கல்லூரியில் உயர்சாதி என கூறப்படும் சமூகத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் சமையலர் அளித்த உணவை உண்ண மறுத்து வகுப்புகளை புறக்கணித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இடமாற்றச் சான்றிதழ் வழங்கி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.