இந்தியா

உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் விபத்து...!

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சங்கொல்லி ராயன் ரயில் நிலையத்தில் சங்கொல்லி ராயன் நின்று கொண்டிருந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

பி1 மற்றும் பி 2 பெட்டிகளிலிருந்து  காலை ஏழு  மணி அளவில் திடீரென அதிக அளவில் புகை வரத் தொடங்கியதும் மளமளவென தீப்பற்றியது.

 இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மும்பை-பெங்களூரு உத்யான் எக்ஸ்பிரஸ் அதன் இலக்கை அடைந்த இரண்டு மணி நேரத்தில் தீப்பிடித்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு உதயன் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டது  இதனால் இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை எனவும், சில நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.