இந்தியா

முதல்வர் பயணம் செய்ய இருந்த இடத்தில் திடீர் குண்டுவெடிப்பு !

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த பகுதியில் திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Malaimurasu Seithigal TV

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த பகுதியில் திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பீமவரத்திற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பீமவரம் செல்ல இருக்கும் நிலையில் அந்தப் பகுதியில் நேற்று மாலை திடீரென்று குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. பீமவரம் அருகே உள்ள காலி இடத்தில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்த போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் அந்த பசு படுகாயம் அடைந்தது.

முதல்வர்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் ஊர் மக்கள் மட்டுமே அல்லாது அதிகாரிகளும் பரபரப்பு அடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார் குண்டு வெடிப்பு பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.