இந்தியா

திடீரென ஏறுதாம்.. திடீரென குறையுதாம்.. இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு.?

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் தொடர்ந்து 3 வது அலையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்றைய பாதிப்பு 6 ஆயிரத்து 915 ஆக இருந்தது. 

இந்நிலையில், இன்று புதிதாக 7 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகமாகும். இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,38,599 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதன்படி, ஒரே நாளில் 223 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,14,246 ஆக அதிகரித்துள்ளது..

கடந்த 24 மணி நேரத்தில் 14,123 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதன் மூலம், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,38,673 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 85,680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 177.79 கோடியாக உள்ளது.