பஞ்சாபில் மே 14 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மே 15 முதல் மே 31 வரை ஆஃப்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும், மே 15 முதல் மே 31 வரை, தொடக்கப் பள்ளி நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.