இந்தியா

கேட்டா அதிர்ச்சி ஆய்டுவீங்க... 5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Malaimurasu Seithigal TV

கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை கடந்த 5 ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடி ஊதியமாக பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபபெட்டின் தலைமைப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் அதிக சம்பளம் பெறும் மென்பொருள் நிறுவன சி.இ.ஓக்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஸூக்கர்பெர்க் கடந்த 8 ஆண்டுகளில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.

இதேபோல் கூகுள் மற்றும் அல்ஃபபெட் நிறுவனங்களில் சிஇஓ சுந்தர் பிச்சை கடந்த 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் பங்குகள், இழப்பீடுகள், ஊதியம் என மொத்தமாக 80 ஆயிரம் கோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.