இந்தியா

இந்தியாவில் தற்கொலை உயிரிழப்பில் 2வது இடத்தில் தமிழ்நாடு: அதிர்ச்சி அறிக்கை...

நாடு முழுவதும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

Malaimurasu Seithigal TV

கடந்த ஆண்டின் தற்கொலை நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண பிரிவு வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக மகராஷ்டிர மாநிலத்தில் 19 ஆயிரத்து 909 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 16 ஆயிரத்து 883 தற்கொலைகளுடன் தமிழ்நாடு 2-ம் இடத்தில் இருக்கிறது.

மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் சேர்த்து, மொத்த தற்கொலையில் 50.1 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நாட்டின் மக்கள்தொகையில் 16.9 சதவீத மக்களை கொண்டுள்ள உத்தரபிரதேசம், தற்கொலையில் 3.1 சதவீதம் என்ற குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறது.

அதன்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 418 தற்கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது அதிகம் ஆகும். நாட்டின் மக்கள்தொகையில் 16.9 சதவீத மக்களை கொண்டுள்ள உத்தரபிரதேசம், தற்கொலையில் 3.1 சதவீதம் என்ற குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறது.

மொத்த தற்கொலையில் தமிழ்நாட்டின் பங்கு 11 சதவீதம் ஆகும்.தற்கொலை செய்து கொண்டவர்களில் 70.9 சதவீதம் பேர் ஆண்கள், 29.1 சதவீதம் பேர் பெண்கள். குடும்ப பிரச்சினைகளால் 33.6 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. திருமணம் தொடர்பான பிரச்சினைகள், நோய், ஆகியவையும் முக்கிய காரணங்களாக உள்ளன.