இந்தியா

கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழக பெண் பத்திரமாக மீட்பு...

50 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிய தமிழக பெண் உட்பட அவரது பயிற்சியாளரும் ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

கேரளா | திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலா கடற்கரை பகுதியில் பாராகிளைடிங் செய்து கொண்டிருந்த கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுடன் அவரது பயிற்சியாளரான உத்திராகண்ட் மாநிலத்தை சார்ந்த சந்தீப் என்பவரும் காற்றின் திசை மாறி அங்கு பணி முடியாத நிலையில் இருந்த 50 அடி உயர மின் கம்பத்தில் நான்கரை மணி அளவில் சிக்கி உள்ளனர்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிந்துள்ளனர். அங்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் மின்கம்பத்தின் கீழ் பகுதியில் வலைகளை விரித்து அவர்கள் விழுந்தால் கூட அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இருவரும் அந்த வலையில் விழுந்து சிறுசிறு காயங்களுடன் உயர்தப்பியுள்ளனர். விபத்து குறித்து அவர்கள் கூறுகையில் தங்களது பாராகிளைடர் மோட்டார் வகையை சார்ந்ததல்ல- கைகளால் இயக்கும் வகையை சார்ந்தது- காற்றின் திசை திடீரென மாறுபட்டதால் தாங்கள் இந்த முன்கம்பத்தில் சிக்கியதாகவும் கூறியுள்ளனர்.